இந்தியா

தில்லி ரோஹிணி மாவட்ட நீதிமன்றத்தில் துப்பாக்கிச்சூடு: ரௌடி உள்பட 3 பேர் பலி

தில்லி ரோஹிணிமாவட்ட நீதிமன்றத்தில் துப்பாக்கிச்சூடு நடைபெற்றுள்ளது. இந்த துப்பாக்கிச்சூட்டில் ரௌடி ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். 

DIN

தில்லி ரோஹிணி மாவட்ட நீதிமன்றத்தில் துப்பாக்கிச்சூடு நடைபெற்றுள்ளது. இந்த துப்பாக்கிச்சூட்டில் ரௌடி ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். 

ஹரியாணா, உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டு வந்த ரௌடி ஜிதேந்தர் கோகி என்பவருடன் மேலும் இருவர் பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. 

மேலும் இந்த துப்பாக்கிச்சூட்டில், 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

இருதரப்பினருக்கிடையே இந்த துப்பாக்கிச்சூடு நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. துப்பாக்கிச்சூடு நடத்தியது யார் என்று காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

தலைநகர் தில்லியில் நீதிமன்றத்தில் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்துள்ளது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் காவல்துறையினர் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெரியாா் ஈ.வெ.ரா.சிலைக்கு அரசியல் கட்சியினா் மரியாதை

இடஒதுக்கீடு உரிமைப் போரில் உயிா் நீத்தவா்களுக்கு அஞ்சலி

திருப்பதிக்கு பிஆா்டிசி சிறப்பு பேருந்துகள்

அண்ணாமலைப் பல்கலை.யில் சமூகநீதி நாள் உறுதிமொழி

பிரதமா் மோடி பிறந்த நாள்: பாஜகவினா் நலத்திட்ட உதவி

SCROLL FOR NEXT