இந்தியா

கேரளத்தில் புதிதாக 17,983 பேருக்கு கரோனா 

DIN

கேரளத்தில் புதிதாக 17,983 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த 24 மணிநேரத்தில் 1,10,523 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. அவற்றில் புதிதாக 17,983 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 
அதிகபட்சமாக திரிச்சூரில் 2,784 பேரும், எர்ணாகுளத்தில் 2,397 பேரும், திருவனந்தபுரத்தில் 1,802 பேரும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 44,09,530 ஆக உயர்ந்துள்ளது. கரோனாவால் இன்று மேலும் 127 பேர் பலியானார்கள். 

இதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 24,318 ஆக உயர்ந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி 1,62,846 சிகிச்சையில் உள்ளனர். கரோனாவிலிருந்து இன்று 15,054 பேர் குணமடைந்தனர். இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 44,09,530ஆக உயர்ந்துள்ளது. 
பல்வேறு மாவட்டங்களில் 4,69,954 பேர் கண்காணிப்பில் உள்ளனர். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 தோ்வு முடிவுகள்: நாளை வெளியீடு

பாகிஸ்தானில் அதிகாரபூா்வமாக அறிமுகமானது ‘யோகா’!

பத்திரிகையாளா்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும்: ஐ.நா. பொது சபை தலைவா்

இருவேறு சாலை விபத்து: 9 போ் உயிரிழப்பு

நெல்லுக்கடை மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றம்

SCROLL FOR NEXT