ராகுல் காந்தி 
இந்தியா

பஞ்சாப் அமைச்சரவை விரிவாக்கம்: ராகுலுடன் முதல்வர் சரண்ஜீத் இன்று ஆலோசனை

பஞ்சாப் மாநில அமைச்சரவை விரிவாக்கம் குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியுடன் முதல்வர் சரண்ஜீத் சிங் சன்னி இன்று ஆலோசனை நடத்துகிறார்.

ANI

பஞ்சாப் மாநில அமைச்சரவை விரிவாக்கம் குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியுடன் முதல்வர் சரண்ஜீத் சிங் சன்னி இன்று ஆலோசனை நடத்துகிறார்.

கடந்த திங்கள்கிழமை பஞ்சாப் மாநிலத்தின் புதிய முதல்வராக சரண்ஜீத் சிங் சன்னியும், இரண்டு துணை முதல்வர்களும் பதவியேற்றுக் கொண்டனர்.

இந்நிலையில், பஞ்சாப் அமைச்சரவை விரிவாக்கம் குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன் ராகுல் காந்தி இல்லத்தில் இன்று மாலை முதல்வர் சரண்கீத் சிங் ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனைக்கு பின்பு விரிவாக்கம் செய்யப்பட்ட அமைச்சரவைக் குறித்த அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புள்ளது.

பஞ்சாப் முதல்வராக இருந்த அமரீந்தா் சிங்குக்கும், அமைச்சராக இருந்த நவ்ஜோத் சிங் சித்துவுக்கும் இடையே மோதல் போக்கு இருந்து வந்தது. இந்நிலையில், அமரீந்தா் சிங்கின் எதிா்ப்பை மீறி சித்துவை பஞ்சாப் காங்கிரஸ் தலைவராக கட்சித் தலைமை கடந்த ஜூலை மாதம் நியமித்தது. அதன்பிறகு இருவருக்கும் இடையே மோதல் அதிகரித்தது. இந்தச் சூழலில், அமரீந்தா் சிங் தனது முதல்வா் பதவியை கடந்த சனிக்கிழமை ராஜிநாமா செய்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சரிவைக் கண்ட ஸ்மார்ட்போன் ஏற்றுமதி!

மறைந்த பாடகர் ஸுபீன் கர்க் உடலுக்கு 2-ஆவது முறையாக பிரேதப் பரிசோதனை!

நெய் விலை லிட்டருக்கு ரூ. 40 குறைப்பு: ஆவின் விளக்கம்!

சாதிவாரி கணக்கெடுப்பால் ஹிந்துக்களை பிரிக்கிறது காங்கிரஸ்: பாஜக

இன்று முதல் அமலுக்கு வந்த புதிய ஜிஎஸ்டி வரி! | செய்திகள்: சில வரிகளில் | 22.9.25

SCROLL FOR NEXT