2020 ஆம் ஆண்டின் குடிமைப் பணி தேர்வு முடிவுகளை மத்திய அரசு பணியாளா் தோ்வாணையம் வெள்ளிக்கிழமை வெளியிட்டது.
ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் உள்ளிட்ட பணிகளுக்கு முதல்நிலை, முதன்மை, நோ்முகத் தோ்வு என 3 கட்டங்களாக குடிமை பணிகள் தோ்வை யுபிஎஸ்சி நடத்தி வருகிறது.
இதையும் படிக்க | மணிப்பூர் பழங்குடி தலைவர் கொலை: 16 பேர் பணியிடை நீக்கம்
இந்நிலையில் 2020ஆம் ஆண்டின் குடிமைப் பணி தேர்விற்கான முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியானது. இதில் நாடு முழுவதும் இருந்து 761 பேர் குடிமைப் பணிக்கு தேர்வாகியுள்ளனர். இவர்களில் 545 ஆண்களும், 216 பெண்களும் அடங்குவர்.
ஐஐடி மும்பையில் பிடெக் (சிவில் இன்ஜினியரிங்) பட்டம் பெற்ற சுபம் குமார் அகில இந்திய அளவில் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
தமிழகத்திலிருந்து 40 பேர் குடிமைப் பணி தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.