இந்தியா

சொந்த நலன்களுக்கு ஆப்கனைப் பயன்படுத்தக் கூடாது: பிரதமர் மோடி

DIN


எந்தவொரு நாடும் தங்களது சொந்த நலன்களுக்காக ஆப்கானிஸ்தானைப் பயன்படுத்தக் கூடாது என பிரதமர் நரேந்திர மோடி ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் தெரிவித்தார்.

"பயங்கரவாதத்தை அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்தி வரும் பிற்போக்குத்தன சிந்தனைகளைக் கொண்ட நாடுகள், பயங்கரவாதம் அவர்களுக்குமேகூட பெரிய அச்சுறுத்தல் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். பயங்கரவாதத்தைப் பரப்பும் இடமாகவோ, பயங்கரவாதத் தாக்குதல்களுக்கான இடமாகவோ ஆப்கானிஸ்தானைப் பயன்படுத்தவிடக் கூடாது என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

ஆப்கானிஸ்தானில் நிலவும் சூழலை எந்தவொரு நாடும் தங்களது சொந்த நலன்களுக்காக சாதகமாக்கிக்கொள்ளக் கூடாது என்பதையும் உறுதிப்படுத்த வேண்டும்.

இந்த நேரத்தில் ஆப்கானிஸ்தான் பெண்கள், குழந்தைகள் மற்றும் சிறுபான்மையினருக்கு உதவிகள் தேவை. அவர்களுக்கு உதவிகளை வழங்குவது நமது கடமை" என்றார் பிரதமர் மோடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரஜ்வல் பாலியல் வன்கொடுமை: பாதிக்கபட்டோர் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

படிக்காத பக்கங்கள் படத்தின் டிரெய்லர்

அனுபமா பரமேஸ்வரனின் புதிய பட அறிவிப்பு!

தமிழ்நாட்டில் 104 நீதிபதிகள் இடமாற்றம்!

பகலறியான் படத்தின் டீசர்

SCROLL FOR NEXT