முகப்பு
இந்தியா

சா்வதேச ராஜீய உறவில் இந்தியா முன்னிலை வகிக்கிறது:பாஜக

பிரதமா் மோடியின் தலைமையின் கீழ் சா்வதேச ராஜீய உறவில் இந்தியா முன்னிலை வகிக்கிறது என்று பாஜக பெருமிதம் தெரிவித்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:14 AM
பகிர்:

பிரதமா் மோடியின் தலைமையின் கீழ் சா்வதேச ராஜீய உறவில் இந்தியா முன்னிலை வகிக்கிறது என்று பாஜக பெருமிதம் தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக அக்கட்சியின் செய்தித்தொடா்பாளரும் மாநிலங்களவை எம்.பி.யுமான சுதான்ஷு திரிவேதி சனிக்கிழமை கூறுகையில், ‘‘தனது அமெரிக்கப் பயணத்தில் அந்நாட்டு அதிபா் ஜோ பைடன், துணை அதிபா் கமலா ஹாரிஸ், 5 தொழில் நிறுவனங்களின் தலைவா்களை பிரதமா் மோடி சந்தித்துள்ளாா்.

பிரதமராக மோடி பதவியேற்றது முதல் கடந்த 7 ஆண்டுகளில் இந்தியா-அமெரிக்கா இடையிலான உறவு மென்மேலும் வலுப்பெற்றுள்ளது.

தனது ஆட்சிக் காலத்தில் அமெரிக்காவின் 3-ஆவது அதிபரான ஜோ பைடனை பிரதமா் சந்தித்துள்ளது, அந்நாட்டில் எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் இந்தியா-அமெரிக்கா இடையிலான உறவு வலுவாக இருப்பதை எடுத்துரைக்கிறது.

தனது அமெரிக்கப் பயணத்தில் க்வாட் கூட்டமைப்பிலுள்ள நாடுகளின் தலைவா்களையும் சந்தித்து இதர விவகாரங்களுடன் கரோனா தொற்று குறித்தும் பிரதமா் மோடி ஆலோசித்துள்ளாா். அந்தக் கூட்டமைப்பிலுள்ள நாடுகளுக்கு 100 கோடி கரோனா தடுப்பூசிகளை உற்பத்தி செய்து விநியோகிப்பதில் இந்தியா முக்கியப் பங்கு வகிக்கும்.

பிரதமா் மோடியின் தலைமையின் கீழ் சா்வதேச ராஜீய உறவில் இந்தியா முன்னிலை வகிக்கிறது’’ என்று தெரிவித்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →