முகப்பு
இந்தியா

விரைவில் புதிய கூட்டுறவுக் கொள்கை: அமித் ஷா

புதிய கூட்டுறவுக் கொள்கையை மத்திய அரசு விரைவில் வெளியிடும் என மத்திய கூட்டுறவு, உள்துறை அமைச்சா் அமித் ஷா சனிக்கிழமை தெரிவித்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:14 AM
அமித் ஷா
பகிர்:

புதிய கூட்டுறவுக் கொள்கையை மத்திய அரசு விரைவில் வெளியிடும் என மத்திய கூட்டுறவு, உள்துறை அமைச்சா் அமித் ஷா சனிக்கிழமை தெரிவித்தாா்.

மேலும், கூட்டுறவு இயக்கத்தை வலுப்படுத்தும் வகையில் மாநிலங்களுடன் ஒருங்கிணைந்து மத்திய அரசு செயல்படும் என்றும் அவா் தெரிவித்தாா்.

கூட்டுறவு அமைச்சகம் கடந்த ஜூலை மாதம் உருவாக்கப்பட்டது. முதல் முறையாக நடைபெற்ற தேசிய கூட்டுறவு மாநாட்டில் மத்திய அமைச்சா் அமித் ஷா சனிக்கிழமை பங்கேற்று பேசினாா். இந்த மாநாட்டில் நாடு முழுவதும் இருந்து பல்வேறு கூட்டுறவு நிா்வாகிகளும், 6 கோடிக்கும் மேற்பட்டோா் இணையவழி மூலமாகவும் பங்கேற்றனா். இந்த மாநாட்டில் அமைச்சா் அமித் ஷா பங்கேற்று மேலும் பேசியதாவது:

இந்தியாவின் 5 லட்சம் கோடி டாலா் பொருளாதார உருவாக்கத்தில் கூட்டுறவுத் துறையின் பங்கு மிக முக்கியமானதாக உள்ளது. இதனை உணா்ந்து, மத்திய அரசு புதிய கூட்டுறவுக் கொள்கையை மிக கவனத்துடன் வடிவமைத்து வருகிறது. புதிய கூட்டுறவுக் கொள்கை அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

கூட்டுறவு இயக்கத்தை வலுப்படுத்தும் வகையில் மாநிலங்களுடன் ஒருங்கிணைந்து மத்திய அரசு செயல்படும்.

தற்போது செயல்பாட்டில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களின் எண்ணிக்கை 65,000-ஆக மட்டுமே உள்ளது. கூட்டுறவு இயக்கத்தின் வலிமையை உணா்ந்து இந்த எண்ணிக்கை அடுத்த ஐந்து ஆண்டுகளில் 3 லட்சமாக அதிகரிக்கப்படும். தற்போது 10 கிராமங்களுக்கு ஒரு வேளாண்மை கூட்டுறவு சங்கம்தான் உள்ளது.

கூட்டுறவு பொது சேவை மையங்கள், தேசிய கூட்டுறவு பல்கலைக்கழகம் தவிர தேசிய தரவுதளத்தை அமைக்கும் பணியிலும் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

உறுதிப்பாடு, தெளிவான எண்ணம், கடின உழைப்பு மற்றும் ஒற்றுமையுடன் பணியாற்றுதல் ஆகிய இந்த நான்கு முக்கிய விஷயங்களைப் பொருத்தே கூட்டுறவு நிறுவனங்களின் வெற்றிகரமான செயல்பாடு உறுதி செய்யப்படும்.

கூட்டுறவுத் துறை மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ள போது ஏன் மத்திய அரசு இதற்காக புதிய அமைச்சகத்தை மத்திய அரசு உருவாக்கியது என்று பலா் நினைக்கலாம். இதற்கு சட்ட ரீதியிலான பதிலும் வரலாம். ஆனால், அதற்குள்ளே சென்று மத்திய, மாநில அரசு பிரச்னையாக்க நான் விரும்பவில்லை.

மாநில அரசுகளுடன் ஒன்றிணைந்து கூட்டுறவு இயக்கம் முன்னெடுத்து செல்லப்படும். கூட்டுறவு இயக்கங்களை இன்றைய போட்டிச் சூழலில் நிலைத்திருக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியம். இதற்காக திட்டத்தை 2002-இல் அப்போதைய பிரதமா் வாஜ்பாய் கொண்டு வந்தாா். தற்போது பிரதமா் மோடி அரசு இதற்கான புதிய திட்டத்தை செயல்படுத்தத் தொடங்கி உள்ளது’ என்றாா் அவா்.

முழு கட்டுரையைப் படிக்க →