முகப்பு
கோப்புப்படம்
இந்தியா

குடிமைப் பணிகள் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பிரதமர் வாழ்த்து

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய குடிமைப் பணிகள் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இந்தியா

குடிமைப் பணிகள் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பிரதமர் வாழ்த்து

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய குடிமைப் பணிகள் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். 

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:14 AM
கோப்புப்படம்
பகிர்:

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய குடிமைப் பணிகள் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது சுட்டுரையில், “மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய குடிமைப் பணிகள் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள். பொது சேவையில் உற்சாகமான மற்றும் திருப்திகரமான பணி காத்திருக்கிறது.
தேர்வில் வெற்றி பெற்றிருப்பவர்கள், நம் நாட்டின் பயணத்தில் முக்கிய காலகட்டத்தின் போது குறிப்பிடத்தக்க நிர்வாக பணியை மேற்கொள்வார்கள்.

நீங்கள் மிகவும் திறமை வாய்ந்தவர்கள் என்பதை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குடிமைப் பணிகள் தேர்வில் தேர்ச்சி அடையாதவர்களுக்குத்
தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். மேலும் பல வாய்ப்புகள் காத்திருக்கின்றன.
அதேவேளையில், ஆய்வு செய்வதற்கான பன்முகத்தன்மை வாய்ந்த வாய்ப்புகள் இந்தியாவில் நிரம்பியிருக்கின்றன. நீங்கள் எடுக்கும் எந்த முடிவிற்கும்
நல்வாழ்த்துகள்.” இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

முழு கட்டுரையைப் படிக்க →