இந்தியா

‘பாஜகவால் என்னை தடுத்து நிறுத்த முடியாது’: மம்தா விமரிசனம்

DIN

தலிபானி பாஜகவால் தன்னை ஒருநாளும் தடுத்து நிறுத்த முடியாது என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

இத்தாலியின் ரோம் நகரில் அக்டோபர் நடைபெற உள்ள உலக அமைதி மாநாட்டில் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கலந்து கொள்வதற்கு வெளியுறவுத்துறை அமைச்சகம் அனுமதி மறுத்துள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கொல்கத்தாவில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, “மாநில முதல்வருக்கு அனுமதி மறுத்திருப்பது தவறானது. உங்களால் என்னை தடுத்து நிறுத்தமுடியாது. வெளிநாடு செல்வதற்கு ஆர்வம் எல்லை என்றாலும் இது சர்வதேச அரங்கில் நமது நாட்டிற்கு கிடைக்கும் மரியாதை. பிரதமர் மோடி இந்துக்கள் குறித்து அதிகம் பேசுகிறார். இந்து பெண்ணான எனக்கு ஏன் அனுமதி மறுக்கப்பட்டது? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், "நாம் நமது சுதந்திரத்தை பாதுகாக்க வேண்டும். தலிபானி பாஜகவால் இந்தியாவை வழிநடத்த முடியாது. பாஜகவை வீழ்த்த திரிணமூல் கட்சியே போதும். பானிபூரில் தொடங்கியுள்ள இந்த யுத்தத்தின் மூலம் நாடு முழுவதும் வெற்றி பெறுவோம்” எனத் தெரிவித்துள்ளார்.

இந்த உலக அமைதி மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில், ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கல், போப் பிரான்சிஸ், இத்தாலி பிரதமர் மரியோ டிராகி ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று யோகம் யாருக்கு?

இன்று நல்ல நாள்!

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

SCROLL FOR NEXT