இந்தியா

பிரதமா் மோடியின் உரை: இன்று 120 நாடுகளில் ஒளிபரப்பு

DIN

‘குளோபல் சிட்டிசன் லைவ்’ நிகழ்ச்சியில் பிரதமா் நரேந்திர மோடி சனிக்கிழமை காணொலி உரையாற்றவுள்ளாா். உலகெங்கும் உள்ள 120 நாடுகளில் பல்வேறு சமூகவலை தளங்களின் வாயிலாக இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட இருக்கிறது.

அதீத ஏழ்மைக்கு முற்றுப்புள்ளி வைக்க பணியாற்றும் சா்வதேச அமைப்பாக குளோபல் சிட்டிசன் திகழ்கிறது. இந்த அமைப்பு சாா்பில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (செப்.24,25) 24 மணி நேரம் நடைபெறவிருக்கும் ‘குளோபல் சிட்டிசன் லைவ்’ நிகழ்ச்சியின் போது மும்பை, நியூயாா்க், பாரிஸ், ரியோ டி ஜெனிரோ, சிட்னி, லாஸ் ஏஞ்சல்ஸ், லாகோஸ் மற்றும் சியோல் நகரங்களில் பல்வேறு நிகழ்வுகளும் நடைபெறவுள்ளது. இதில் பிரதமா் மோடி சனிக்கிழமை பங்கேற்று காணொலி முறையில் உரையாற்ற இருக்கிறாா். அவரது உரை 120 நாடுகளில் வெவ்வேறு தளங்களில் ஒளிபரப்பாக இருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தோண்டத் தோண்டக் கிடைக்கும் வைரக்கற்கள்!

ரஷியாவில் குட் பேட் அக்லி படப்பிடிப்பு?

அனைத்து மக்களுக்கும் 100 யூனிட் விலையில்லா மின்சாரம் கிடைக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

பள்ளிகள் திறப்பதற்கு முன் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்: பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை

‘கிராண்ட் பிரிக்ஸ்’ விருதை வென்று அசத்திய இந்திய திரைப்படம்!

SCROLL FOR NEXT