இந்தியா

உலக ஆறுகள் தினம்: 'நதி விழாவை' கடைப்பிடிக்க மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்!

DIN

நம் நாட்டில் உள்ள ஆறுகளுடன் தொடர்புடைய பாரம்பரியங்களை இணைக்க ஆண்டுதோறும் உலக ஆறுகள் தினத்தன்று 'நதி விழாவை' கொண்டாட பிரதமர் மோடி மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். 

ஒவ்வொரு மாத இறுதி ஞாயிற்றுக்கிழமைகளில் 'மனதின் குரல்' நிகழ்ச்சியின் வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி மக்களிடம் உரையாற்றி வருகிறார். 

இன்று 81 வது 'மனதின் குரல்' நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, இன்று உலக ஆறுகள் தினம் குறித்துப் பேசினார். 

அப்போது பேசிய அவர், பல நாள்களை நாம் கொண்டாடி வருகிறோம். ஆனால் இன்று  'உலக ஆறுகள் தினம்'. இந்நாள் இந்தியாவின் மரபுகளுடன் மிகவும் ஒத்துப்போகிறது. தன்னலமின்றி நமக்குத் தண்ணீர் வழங்கும் நமது நதிகளின் பங்களிப்பை நினைவுகூரும் நாள் இது.

இந்திய நதிகள் ஓர் உணர்வுபூர்வமான விஷயம். அது ஒரு வாழும் உயிரினம். இன்று உலக ஆறுகள் தினத்தைக் கொண்டாடும்போது, ​​நாடு முழுவதும் ஆண்டுக்கு ஒரு முறையாவது 'நதி விழாவை' கொண்டாடுமாறு நான் மக்களை கேட்டுக்கொள்கிறேன். 

நமது வேதங்களில், ஆறுகளில் ஒரு சிறிய மாசுபாடுகூட தவறு என்று சொல்லப்படுகிறது. தூய்மையை ஒரு வெகுஜன இயக்கமாக மாற்றிய பணியைச் செய்த மகாத்மா காந்தியின் கொள்கைகளைப் பின்பற்றவும், நதிகளை சுத்தமாக வைத்திருக்கவும் மக்களை கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடலில் ராட்சத அலைகள் எழும் -கடற்கரை செல்லும் மக்களுக்கு எச்சரிக்கை

‘ஒரு வார்த்தை மாறிடுச்சு..’ : கங்கனாவின் பேச்சு குழப்பமான கதை!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு: பிரசாரம் ஓய்வு

SCROLL FOR NEXT