முகப்பு
இந்தியா

மகாராஷ்டிரத்தில் புதிதாக 2,432 பேருக்கு கரோனா

மகாராஷ்டிரத்தில் புதிதாக 2,432 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:14 AM
கோப்புப்படம்
பகிர்:


மகாராஷ்டிரத்தில் புதிதாக 2,432 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மகாராஷ்டிர கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகள் வெளியாகியுள்ளன. புதிதாக 2,432 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 2,895 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 32 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து, மாநிலத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 65,41,762 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை மொத்தம் 63,62,248 பேர் குணமடைந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 1,38,902 ஆக உயர்ந்துள்ளது.

இன்றைய நிலவரப்படி 37,036 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மகாராஷ்டிரத்தில் குணமடைவோர் விகிதம் 97.06 சதவிகிதம். இறப்பு விகிதம் 2.12 சதவிகிதம். வீட்டுக் கண்காணிப்பில் 2,57,144 பேர் உள்ளனர். 1,517 பேர் கரோனா மையங்களில் உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.