முகப்பு
இந்தியா

தில்லியில் புதிதாக 32 பேருக்கு கரோனா

தில்லியில் புதிதாக 32 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:14 AM
கோப்புப்படம்
பகிர்:


தில்லியில் புதிதாக 32 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது.

தில்லி கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய செய்திக் குறிப்பை மாநில அரசு வெளியிட்டுள்ளது. புதிதாக 32 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 14,38,746 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் நோய்த் தொற்றால் உயிரிழப்புகள் ஏற்படவில்லை.

கடந்த 24 மணி நேரத்தில் 50,367 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்படும் விகிதம் 0.06 சதவிகிதமாகப் பதிவாகியுள்ளது.

மேலும் 37 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 14,13,295 பேர் குணமடைந்துள்ளனர். பலி எண்ணிக்கை 25,085 ஆக உள்ளது.

இன்றைய நிலவரப்படி 366 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.