மாநிலங்களின் கையிருப்பில் 4.74 கோடி தடுப்பூசிகள்: மத்திய அரசு
மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் கையிருப்பில் இன்னும் 4.74 கோடிக்கும் மேலான தடுப்பூசிகள் இருப்பதாக மத்திய அரசு திங்கள்கிழமை தெரிவித்தது.
மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் கையிருப்பில் இன்னும் 4.74 கோடிக்கும் மேலான தடுப்பூசிகள் இருப்பதாக மத்திய அரசு திங்கள்கிழமை தெரிவித்தது.
இதுபற்றி மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது:
"மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இதுவரை 84.50 கோடிக்கும் மேலான தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. இன்னும் 21 லட்சம் தடுப்பூசிகள் வழங்கப்படுவதற்குத் தயார் நிலையில் உள்ளன. மாநிலங்களின் கையிருப்பில் 4.74 கோடிக்கும் மேலான தடுப்பூசிகள் இன்னும் கையிருப்பில் உள்ளன."
நாட்டில் இன்று (திங்கள்கிழமை) மட்டும் 8 மணி நிலவரப்படி 97,15,734 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 86,01,59,011 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.