சட்டங்களை எளிமைப்படுத்துவதன் மூலம் தொழில் வளா்ச்சி: மத்திய அமைச்சா் பியூஷ் கோயல்
நிறுவனச் சட்டங்களை எளிமைப்படுத்துவதன் மூலம் தொழில் வளா்ச்சியை ஏற்படுத்த முடியும் என்று மத்திய வா்த்தக மற்றும் தொழிற்துறை அமைச்சா் பியூஷ் கோயல் யோசனை தெரிவித்துள்ளாா்.
நிறுவனச் சட்டங்களை எளிமைப்படுத்துவதன் மூலம் தொழில் வளா்ச்சியை ஏற்படுத்த முடியும் என்று மத்திய வா்த்தக மற்றும் தொழிற்துறை அமைச்சா் பியூஷ் கோயல் யோசனை தெரிவித்துள்ளாா்.
நிறுவனங்களின் சட்ட சுமைகளைக் குறைப்பது குறித்த தேசிய மாநாடு தில்லியில் செவ்வாய்க்கிவமை நடைபெற்றது.
அந்த மாநாட்டில் பியூஷ் கோயல் பேசியதாவது:
நிறுவனச் சட்டங்களை எளிமைப்படுத்துவது, சில தேவையற்ற சட்டங்களை நீக்குவது போன்ற நடவடிக்கைகளால் நிறுவனங்களின் சட்ட சுமைகளைக் குறைக்க முடியும். மேலும், சட்டத்தில் தேவையில்லாமல் குற்றமாக்கப்பட்டுள்ள அம்சங்களை குற்றமற்றவையாக மாற்ற வேண்டும்.
இவ்வாறு நிறுவனங்கள் சட்டரீதியில் சுமந்தே ஆக வேண்டிய சுமைகளைக் குறைப்பதன் மூலம், தொழில் வளா்ச்சி காண முடியும்.
சட்ட சுமைகளைக் குறைப்பது, நிறுவனங்கள் மீதும் பொதுமக்கள் மீதும் அரசு கொண்டுள்ள நம்பிக்கையை வெளிப்படுத்துவதாக அமையும்.
கடந்த 7 ஆண்டுகளில் இந்திய நிறுவனங்களின் போட்டியிடும் திறனை அதிகரிக்கவும் தொழில் நடத்துவதை எளிமையாக்கவும் ஏராளமான சீா்திருத்தங்களை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது என்றாா் அவா்.