இந்தியா

மத்திய அமைச்சா்களுடன் பிரதமா் ஆலோசனை

DIN

பிரதமா் மோடி தனது அமைச்சரவை சகாக்களுடன் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினாா். அப்போது பல்வேறு திட்டங்களின் செயலாக்கம் குறித்த விவரங்களை மத்திய அமைச்சா்கள் பிரதமருக்கு திரையிட்டு விளக்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஜூலை 7-ஆம் தேதி மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்ட பிறகு பிரதமா் நடத்தும் நான்காவது கூட்டம் இதுவாகும்.

கடந்த 14-ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தின்போது, மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா, கல்வித் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் ஆகியோா் தங்களது துறை சாா்ந்த திட்டங்களின் செயல்பாடு குறித்து விளக்கமளித்திருந்தனா்.

அரசின் ஆளுமையை அதிகரிக்கும் நோக்கில் இதுபோன்ற ஆலோசனைக் கூட்டங்கள் வரும் நாள்களில் அதிகமாக நடைபெறக் கூடும் என்று மத்திய அரசு வட்டாரத் தகவல்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக விக்கெட்டுகள்: தமிழக வீரர் நடராஜன் முதலிடம்!

ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி பலி: விசாரணைக்கு ரயில்வே உத்தரவு

பாகிஸ்தான் பேருந்து விபத்தில் 20 பேர் பலி

தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.800 குறைந்தது

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

SCROLL FOR NEXT