கோப்புப்படம் 
இந்தியா

'நான்தான் சொன்னேனே': சித்து ராஜிநாமா குறித்து அமரீந்தர் ட்வீட்

நவ்ஜோத் சிங் சித்து நிலையானவர் அல்ல என்று தான் கூறியதாக பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

DIN


நவ்ஜோத் சிங் சித்து நிலையானவர் அல்ல என்று தான் கூறியதாக பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

பஞ்சாபில் அடுத்தாண்டு பேரவைத் தேர்தல் வரவுள்ள நிலையில் மாநில காங்கிரஸ் தலைவராக கடந்த ஜூலை மாதம் நியமிக்கப்பட்டார். அப்போதைய முதல்வர் அமரீந்தர் சிங் எதிர்ப்பை மீறி அவர் கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டது, கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியது.

இதன்பிறகு, நவ்ஜோத் சிங் சித்து, அமரீந்தர் சிங் இடையிலான மோதல் போக்கு தீவிரமானதைத் தொடர்ந்து, கடந்த 18-ம் தேதி முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் அமரீந்தர். இதையடுத்து, சரண்ஜீத் சிங் சன்னி கடந்த 20-ம் தேதி மாநில முதல்வராகப் பதவியேற்றார்.

இந்த நிலையில், மாநிலத் தலைவர் பொறுப்பை ஏற்று இரண்டு மாதங்களே ஆன நிலையில் அதை ராஜிநாமா செய்வதாக சித்து செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.

சித்துவின் பெயரைக் குறிப்பிடாமல் ட்விட்டர் பக்கத்தில் அமரீந்தர் பதிவிட்டுள்ளது:

"அவர் நிலையான மனிதர் அல்ல, எல்லை மாநிலமான பஞ்சாப்புக்குத் தகுதியானவர் கிடையாது என்று நான்தான் சொன்னேனே."

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

"அனைவருக்கும் ஸ்டார்ட்அப்' மையம் சென்னை ஐஐடி-யில் தொடக்கம்

வாக்குச்சாவடி நிலைய அலுவலா் 2-க்கான ஆலோசனைக் கூட்டம்

பால் பண்ணை தொழில் முனைவோருக்கு ஒரு மாத திறன் மேம்பாட்டுப் பயிற்சி இன்று தொடக்கம்

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி தொடக்கம்: வீடு வீடாகச் சென்று படிவங்கள் அளிப்பு

SCROLL FOR NEXT