இந்தியா

சித்து ராஜிநாமா இன்னும் ஏற்கப்படவில்லை: தகவல்

DIN


நவ்ஜோத் சிங் சித்துவின் பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் பதவி ராஜிநாமாவை கட்சித் தலைமை இன்னும் ஏற்கவில்லை எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பஞ்சாப் காங்கிரஸ் தலைவராக கடந்த ஜூலை மாதம் பொறுப்பேற்றுக் கொண்டார் சித்து. இதன்பிறகு, சித்துவுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக அமரீந்தர் சிங் முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார். புதிய முதல்வராக சரண்ஜித் சிங் சன்னி பதவியேற்றுக் கொண்டார்.

இந்த நிலையில் பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜிநாமா செய்வதாக சித்து செவ்வாய்க்கிழமை மாலை அறிவித்தார்.

இதைத் தொடர்ந்து, கட்சியின் பொருளாளர், இரண்டு நாள்களுக்கு முன்பு பதவியேற்ற அமைச்சர் உள்ளிட்டோர் சித்துவுக்கு ஆதரவு தெரிவிப்பதாகத் தங்களது பதவிகளை ராஜிநாமா செய்தனர்.

இந்த நிலையில், சித்துவின் ராஜிநாமாவை கட்சித் தலைமை இன்னும் ஏற்கவில்லை எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரச்னையை முதலில் தங்களுக்குள் தீர்த்துக் கொள்ளுமாறு கட்சித் தலைமை மாநிலத் தலைமையை கேட்டுக்கொண்டுள்ளதாகவும் தகவலறிந்த காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரலாற்று நிகழ்வு: திருப்பைஞ்ஞீலியில் அப்பர் கட்டமுது விழா

2 நாள் பயணமாக மேற்கு வங்கம் செல்கிறார் பிரதமர் மோடி!

இஸ்ரேல் உறவு துண்டிப்பு: நெதன்யாகு மீது கொலம்பிய அதிபர் காட்டம்!

தொலையாத கனவுகள்.. லாபதா லேடீஸ் - திரை விமர்சனம்!

400 பெண்களைச் சீரழித்த பிரஜ்வலுக்கு வாக்குக் கேட்டதற்காக மோடி மன்னிப்புக் கேட்க வேண்டும்: ராகுல் காந்தி

SCROLL FOR NEXT