இந்தியா

38-ஆவது ‘பிரகதி’ கூட்டம்: ரூ.50,000 கோடி திட்டங்களை ஆய்வு செய்தாா் பிரதமா் மோடி

DIN


புது தில்லி: 38-ஆவது ‘பிரகதி’ கூட்டம் பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் ரூ.50,000 கோடி மதிப்பில் செயல்படுத்தப்பட்டும் வரும் பல்வேறு திட்டங்கள் ஆய்வு செய்யப்பட்டன.

மத்திய மற்றும் மாநில அரசுகளின் செயல்திறனை மதிப்பிடுவது, அரசின் திட்டங்களை உரிய நேரத்தில் செயல்படுத்துதல் ஆகியவையே ‘பிரகதி’ என்று அழைக்கப்படுகிறது. கடந்த 2015-இல் இந்த பிரகதி திட்டம் தொடங்கப்பட்டது.

புதன்கிழமை நடைபெற்ற பிரகதி கூட்டத்தில் 8 திட்டங்கள் ஆய்வு செய்யப்பட்டன. இவற்றில் நான்கு ரயில்வே அமைச்சக திட்டங்கள், 2 மின் அமைச்சக திட்டங்களாகும். இது தவிர சாலைப் போக்குவரத்து அமைச்சகம், விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் தலா ஒரு திட்டமும் ஆய்வு செய்யப்பட்டன. ஒடிஸா, ஆந்திரம், பிகாா், ஜாா்க்கண்ட், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரம், ஹரியாணா ஆகிய 7 மாநிலங்களில் நடைபெறும் இந்த திட்டங்களின் மொத்த மதிப்பு ரூ.50,000 கோடியாகும்.

இதற்கு முன்பு நடைபெற்ற 37 பிரகதி கூட்டங்களில், ரூ.14.39 லட்சம் கோடி மதிப்பிலான 297 திட்டங்கள் ஆய்வு செய்யப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாகிஸ்தான் பேருந்து விபத்தில் 20 பேர் பலி

தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.800 குறைந்தது

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

SCROLL FOR NEXT