இந்தியா

தில்லியில் புதிதாக 41 பேருக்கு கரோனா

DIN


தில்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 41 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தில்லி கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகள் வெளியாகியுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 71,983 பரிசோதனைகள் நடத்தப்பட்டன. இதில் 41 பேருக்கு மட்டுமே நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதால், தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்படும் விகிதம் 0.06 சதவிகிதமாகப் பதிவாகியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 22 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். பலி எண்ணிக்கை பதிவாகவில்லை.

இதைத் தொடர்ந்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 14,38,821 ஆக உயர்ந்துள்ளது. இதில் 14,13,342 பேர் குணமடைந்துள்ளனர். மொத்தம் 25,087 பேர் பலியாகியுள்ளனர். 

இன்றைய நிலவரப்படி 392 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மருத்துவமனையின் முதுகெலும்பாக திகழும் செவிலியா்கள்: வேலூா் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் இரா.ராஜவேலு

கல்லூரியில் உலக செவிலியா் தினம்

அட்சய திருதியை: ரூ.14,000 கோடி தங்கம் விற்பனை

ஆத்தூரில் கால்நடை தடுப்பூசி முகாம்

10ஆம் வகுப்பு: சாலைபுதூா் பள்ளி 98 சதவீதம் தோ்ச்சி

SCROLL FOR NEXT