முகப்பு
இந்தியா

'நிபா' வைரஸுக்குத் தடுப்பு மருந்து: கேரள சுகாதாரத் துறை தகவல்

நிபா வைரஸுக்கு வெளவால்கள் மாதிரிகளிலிலிருந்து தடுப்பு மருந்து கண்டறியப்பட்டுள்ளதாக கேரள சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். 

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:15 AM
வீணா ஜார்ஜ் (கோப்புப் படம்)
பகிர்:

நிபா வைரஸுக்கு வெளவால்கள் மாதிரிகளிலிலிருந்து தடுப்பு மருந்து கண்டறியப்பட்டுள்ளதாக கேரள சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். 

புணேவைச் சேர்ந்த நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் வைராலஜி நிறுவனத்தில் வெளவால்களில் இருந்து எடுக்கப்பட்ட இரு மாதிரிகளில் மருந்து கண்டறியப்பட்டுள்ளது.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நிபா வைரஸ் முதலில் கண்டறியப்பட்ட கோழிகோடு பகுதியிலுள்ள பல்வேறு வெளவால்களிடமிருந்து மாதிரிகள் எடுக்கப்பட்டு நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் வைராலஜி நிறுவனத்தில் பரிசோதிக்கப்பட்டன.

இதில், இரு வேறு மாதிரிகளை பரிசோதனை செய்ததில் நிபா வைரஸுக்கு எதிரான தடுப்பு மருந்து கண்டறியப்பட்டது.  மேலும் சில மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளன. அதன் முடிவுகளும் விரைவில் தெரியவுள்ளன. 

செப்டம்பர் மாதம் 4-ம் தேதி 12 வயது சிறுவனுக்கு நிபா கண்டறியப்பட்டதிலிருந்து சுகாதாரத் துறை விழிப்புணர்வுடன் உள்ளது. 

பாதிக்கப்பட்ட சிறுவன் உள்ள வீட்டிற்கு 3 கிலோமீட்டர் சுற்றளவிற்கு அனைத்து வீடுகளிலும் மாதிரிகள் பரிசோதிக்கப்படுகின்றன என்று கூறினார். 

முழு கட்டுரையைப் படிக்க →