இந்தியா

‘ஒரு நாளைக்கு ரூ.1002 கோடி வருமானம்’: கரோனாவிலும் அதிகரித்த அதானியின் சொத்துமதிப்பு

DIN

ஐ.ஐ.எஃப்.எல். ஹரூன் இந்தியா நிறுவனம் 2021ஆம் ஆண்டில் இந்தியாவின் முன்னணி கோடீஸ்வரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

ஐ.ஐ.எஃப்.எல். ஹரூன் இந்தியா நிறுவனம் ஆண்டுதோறும் நாட்டின் முன்னணி கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்புகளை வெளியிட்டு வருகிறது. இந்திய மதிப்பில் ரூ.1000 கோடிக்கும் அதிகமாக சொத்துக்களை சேர்த்த கோடீஸ்வரர்களின் பட்டியலை நடப்பாண்டு அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. 

அதன்படி இந்தியாவில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். 

ரூ.7,18,000 கோடி சொத்துக்களுடன் அவர் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். அவரது சொத்து மதிப்பு கடந்த ஆண்டைக் காட்டிலும் 2021ஆம் ஆண்டில் 9 சதவிகிதம் அதிகரித்துள்ளது. முகேஷ் அம்பானி நாளொன்றுக்கு 163 கோடி வருமானம் ஈட்டியுள்ளார்.

எனினும் கடந்த ஆண்டைக் காட்டிலும் நடப்பாண்டு அதானி நிறுவனத்தின் தலைவர் கெளதம் அதானி 261 சதவிகிதம் கூடுதலாக சொத்துக்களை சேர்த்து ரூ.5,05,900 கோடியுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார். இவர் நாளொன்றுக்கு சராசரியாக ரூ.1002 கோடி சொத்துக்களை சேர்த்துள்ளார்.

இவ்விருவரைத் தொடர்ந்து எச்.சி.எல். நிறுவனத்தின் சிவநாடார் ரூ.236600 கோடி சொத்துக்களுடன் மூன்றாவது இடத்திலும், இந்துஜா நிறுவனம் ரூ.220000 கோடி சொத்துக்களுடன் 4 ஆவது இடத்திலும் உள்ளனர். நடப்பாண்டு புதிதாக 179 பேர் ரூ.1000 கோடிக்கும் அதிகமாக சொத்துக்களைச் சேர்த்து இந்தப் பட்டியலில் இணைந்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பயப்பட வேண்டாம், ஓட வேண்டாம்: யாரைச் சொல்கிறார் மோடி?

பெ. சுபாஷ் சந்திர போஸ் காலமானார்

மே 7 வரை வெயில் அதிகரிக்கும்!

25 ஆண்டுகளுக்குப் பின் காந்தி குடும்பம் போட்டியிடாத அமேதி! ஸ்மிருதி இரானி கருத்து

யாரோ இவர் யாரோ? அந்த ஓவியாவேதான்...

SCROLL FOR NEXT