முகப்பு
இந்தியா

நாட்டில் புதிதாக 41,381 பேருக்கு கரோனா

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 41,381 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:48 AM
கோப்புப்படம்
பகிர்:


நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 41,381 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாட்டின் கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகள் வெளியாகியுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 41,831 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 39,258 பேர் குணமடைந்துள்ளனர். இதன்மூலம், நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 4,10,952 ஆக உயர்ந்துள்ளது. மொத்த பாதிப்பில் இது 1.30 சதவிகிதம்.

மேலும் 541 பேர் நோய்த் தொற்றால் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 4,24,351 ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை மொத்தம் 3,08,20,521 பேர் குணமடைந்துள்ளனர். குணமடைவோர் விகிதம் 97.36 சதவிகிதமாக உள்ளது.

தடுப்பூசி:

நாட்டில் இதுவரை மொத்தம் 47.02 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.