முகப்பு
கோப்புப்படம்
இந்தியா

தில்லியில் புதிதாக 25 பேருக்கு கரோனா

​தில்லியில் புதிதாக 25 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியா

தில்லியில் புதிதாக 25 பேருக்கு கரோனா

​தில்லியில் புதிதாக 25 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:57 AM
கோப்புப்படம்
பகிர்:


தில்லியில் புதிதாக 25 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

தில்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 69,160 பரிசோதனைகள் நடத்தப்பட்டன. இதில் 25 பேருக்கு மட்டுமே நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால், தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்படும் விகிதம் 0.04 சதவிகிதமாகப் பதிவாகியுள்ளது.

மேலும் 2 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 2 பேர் பலியாகியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து, அங்கு மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 14,37,217 ஆக உயர்ந்துள்ளது. இதில் 14,11,690 பேர் குணமடைந்துள்ளனர். 25,079 பேர் பலியாகியுள்ளனர்.

இன்னும் 448 பேர் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →