முகப்பு
இந்தியா

மும்பை சுவர் இடிந்து விழுந்த சம்பவம்: பலி எண்ணிக்கை 17 ஆக உயர்வு

மும்பை செம்பூரிலுள்ள பாரத் நகர் பகுதியில் நிலச்சரிவால் குடிசை வீடுகள் மீது சுவர் இடிந்து விழுந்ததில் பலி எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது. மும்பை மாநகராட்சி அறிவித்துள்ளது.

Updated On : 18 ஜூலை, 2021 at 1:20 PM
பகிர்:


மும்பை செம்பூரிலுள்ள பாரத் நகர் பகுதியில் நிலச்சரிவால் குடிசை வீடுகள் மீது சுவர் இடிந்து விழுந்ததில் பலி எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது. மும்பை மாநகராட்சி அறிவித்துள்ளது.

மும்பையில் இடைவிடாது பெய்து வரும் கனமழை காரணமாக செம்பூர் பாரத் நகர் பகுதியில் நள்ளிரவு 1 மணியளவில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால், சுவர் இடிந்து குடிசை வீடுகள் மீது விழுந்தது. இதில் பலியானோர் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளதாக மும்பை மாநகராட்சி அறிவித்துள்ளது.

மேலும் இடிபாடுகளில் சிக்கி காயமடைந்தவர்களில் இரண்டு பேர் சிகிச்சை முடிந்து மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியுள்ளனர்.

Advertisement

முன்னதாக, மீட்புப் பணியிலிருந்த தீயணைப்புத் துறையினர் இடிபாடுகளில் சிக்கியிருந்த 16 பேர் மீட்கப்பட்டதாகத் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.