கேரளத்தில் புதிதாக 6,676 பேருக்கு கரோனா
கேரளத்தில் புதிதாக 6,676 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
கேரளத்தில் புதிதாக 6,676 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
கேரள கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகள் வெளியாகியுள்ளன. புதிதாக 6,676 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 48,51,791 ஆக உயர்ந்துள்ளது. 60 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 26,925 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 11,023 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 47,50,293 பேர் குணமடைந்துள்ளனர்.
இதையும் படிக்க | சபரிமலையில் பக்தர்களுக்கு அனுமதியில்லை: ஆட்சியர்
இன்றைய நிலவரப்படி இன்னும் 83,184 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
கடந்த 24 மணி நேரத்தில் 68,668 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் 34 பேர் வெளிமாநிலங்களிலிருந்து வந்தவர்கள். 6,331 பேர் தொடர்பிலிருந்ததன் மூலம் பாதிக்கப்பட்டுள்ளனர். 267 பேருக்கு எவ்வாறு நோய்த் தொற்று ஏற்பட்டது என்பது இன்னும் கண்டறியப்படவில்லை.
பல்வேறு மாவட்டங்களில் 3,02,818 பேர் கண்காணிப்பில் இருப்பது குறிப்பிடத்தக்கது.