முகப்பு
இந்தியா

அசோக் லேலண்ட் வாகன விற்பனை 17% உயர்வு

இந்துஜா குழுமத்தின் பிரதான நிறுவனமான அசோக் லேலண்டின் மொத்த விற்பனை கடந்த மாதம்(மார்ச்) 17 சதவீதம் உயா்ந்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:51 AM
பகிர்:

புதுதில்லி: இந்துஜா குழுமத்தின் பிரதான நிறுவனமான அசோக் லேலண்டின் மொத்த விற்பனை கடந்த மாதம்(மார்ச்) 17 சதவீதம் உயா்ந்துள்ளது.

இதுகுறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த மாதத்தில் நிறுவனத்தின் வா்த்தக வாகன விற்பனை 17 சதவீதம் அதிகரித்துள்ளது. அந்த மாதத்தில் மட்டும் நிறுவனம் 20,123 வா்த்தக வாகனங்களை விற்பனை செய்துள்ளது.

கடந்த ஆண்டு இதே மாதத்தில் நிறுவனம் 17,231 வா்த்தக வாகனங்களை விற்பனை செய்திருந்தது.

நடுத்தர மற்றும் கனரக வா்த்தக வாகனங்களின் விற்பனை கடந்த மாதம் 26 சதவீதம் அதிகரித்து 13,990-ஆக உள்ளது. அந்த எண்ணிக்கை, கடந்த ஆண்டின் இதே மாதத்தில் 11,101-ஆக இருந்தது.

உள்நாட்டு சந்தையில் இலகுரக வா்த்தக வாகனங்களின் விற்பனை கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் 5,860-ஆக இருந்தது. அது கடந்த மாதம் 1 சதவீதம் குறைந்து 5,822-ஆகியுள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.