கோப்புப் படம் 
இந்தியா

நாட்டில் தொடர்ந்து குறைந்து வரும் கரோனா பாதிப்பு: புதிதாக 1,335 பேருக்குத் தொற்று

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் புதிதாக 1,335 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒரே நாளில் 52 பேர் உயிரிழந்தனர்.

DIN

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் புதிதாக 1,335 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒரே நாளில் 52 பேர் உயிரிழந்தனர்.

நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் விவரங்கள் குறித்த விவரங்களை மத்திய சுகாதாரத் துறை தினசரி வெளியிட்டு வருகின்றது. இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள தகவலின்படி,

நாட்டில் புதிதாக 1,335 பேருக்கு கரோனா கண்டறியப்பட்டுள்ளது. இதனால் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 4,30,25,775 ஆக உள்ளது. 

கடந்த 24 மணிநேரத்தில் 55 பேர் உயிரிழந்தனர். இதனால் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,21,181-ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.21 சதவிகிதமாக உள்ளது. 

நேற்று ஒரேநாளில் 1,918 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 4,24,90,922 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் விகிதம் 98.76 சதவிகிதமாக உள்ளது. 

தற்போது 13,672 பேர் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுவோரின் விகிதம் 0.03 சதவிகிதமாக குறைந்துள்ளது. 

நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் நாடு முழுவதும் இதுவரை 184.31,89,377 கோடி கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 23,57,917 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் இதுவரை 78,97,70,958 (78.9 கோடி) கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 6,06,036 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருப்பதிக்கு பிஆா்டிசி சிறப்பு பேருந்துகள்

அண்ணாமலைப் பல்கலை.யில் சமூகநீதி நாள் உறுதிமொழி

பிரதமா் மோடி பிறந்த நாள்: பாஜகவினா் நலத்திட்ட உதவி

இன்றைய இந்தியாவுக்கு அந்நியா்கள் வழிகாட்டுதல் தேவையில்லை: மத்திய அமைச்சா் ராஜ்நாத் சிங்

கடன் தொல்லை: வியாபாரி தூக்கிட்டுத் தற்கொலை

SCROLL FOR NEXT