சித்து 
இந்தியா

பஞ்சாபில் சட்டம் - ஒழுங்கு மிகவும் மோசமான நிலையில் உள்ளது: நவ்ஜோத் சிங் சித்து குற்றச்சாட்டு

பஞ்சாபில் சட்டம்-ஒழுங்கு மிகவும் மோசமான நிலையில் உள்ளதாக மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து தெரிவித்துள்ளார்.

DIN


பஞ்சாபில் சட்டம்-ஒழுங்கு மிகவும் மோசமான நிலையில் உள்ளதாக மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து தெரிவித்துள்ளார்.

பஞ்சாபில் முதல்வர் பகவந்த் மான் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி அமைந்துள்ளது. 

இந்நிலையில், பஞ்சாப் மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து, ஆம் ஆத்மியினர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். 

பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவின் சனூரில் காங்கிரஸ் தொண்டர் ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்டதாகக் கூறப்படும் வீடியோவை ஆம் ஆத்மி கட்சியினர் பார்க்க வேண்டும் என்று கூறியதுடன், பஞ்சாபில் சட்டம் ஒழுங்கு மிகவும் மோசமான நிலையில் உள்ளது என்றும் ஆம் ஆத்மி கட்சியினரின் சமீபத்திய நடவடிக்கைகள் பகத்சிங்கின் சித்தாந்தத்தை காட்டவில்லை என்றும் தெரிவித்தார்.

மேலும், 'கேஜரிவால், உங்கள் உயிருக்கு ஆபத்து என்று உங்களுடைய மக்கள்  தில்லி நீதிமன்றத்திற்குச் செல்கிறார்கள். பஞ்சாப் மக்களின் உயிரைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாமா? தில்லியில் நடந்தால் அதை காழ்ப்புணர்ச்சி என்று சொல்கிறீர்கள். பஞ்சாபில் என்ன நடக்கிறது என்று பாருங்கள்.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மற்றொருவர் சனூரில் கொடூரமாக தாக்கப்பட்டுள்ளார்.

பகத் சிங் கொள்கைகளை கடைபிடிக்கிறோம் என்று கூறி கொலைகள், துப்பாக்கி முனையில் கார் திருட்டுகள், வழிப்பறி, குண்டர்கள் மற்றும் கப்சாக்கள்... என சுயநலத்துடன் தங்களது நோக்கங்களை ஆம் ஆத்மி கட்சியினர் நிறைவேற்றுகின்றனர்' என்று குற்றம்சாட்டியுள்ளார். 

முன்னதாக வியாழக்கிழமை, ஜிராவின் கசோவானா கிராமத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இக்பால் சிங் என்பவரை ஆம் ஆத்மி கட்சியினர் கொன்றதாக  சித்து குற்றம்சாட்டியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிபு சோரனின் இறுதிச்சடங்கில் பங்கேற்க ராஞ்சி வந்தடைந்த ராகுல், கார்கே!

தெலங்கானாவின் பெருமை... டிஎஸ்பி சிராஜை வாழ்த்திய காவல்துறை!

பாகிஸ்தான்: ட்ரோன் மூலம் காவல் நிலையத்தில் வெடிகுண்டு வீசிய தீவிரவாதிகள்!

மேகவெடிப்பால் திடீர் வெள்ளம்! குடியிருப்புகளை அடித்துச் செல்லும் காட்சி! | Uttarakhand flood

வழக்கை ரத்து செய்யக்கோரி மதுரை ஆதீனம் மனு தாக்கல்: காவல்துறை பதிலளிக்க உத்தரவு!

SCROLL FOR NEXT