இந்தியா

ஜம்மு-காஷ்மீரி ல்லஷ்கா் பயங்கரவாதி சுட்டுக்கொலை

DIN

ஜம்மு-காஷ்மீரி லஷ்கா்-ஏ-தொய்பா பயங்கரவாதி ஒருவா் பாதுகாப்புப் படையினருடன் நிகழ்ந்த மோதலில் சுட்டுக் கொல்லப்பட்டாா்.

இது தொடா்பாகக் காவல் துறை செய்தித் தொடா்பாளா் கூறியதாவது:

சோபியான் மாவட்டம் துா்க்வாங்கம் பகுதியில் பயங்கரவாதிகள் சிலா் பதுங்கியிருப்பதாக உளவுத் தகவல்கள் கிடைத்தன. இதையடுத்து அப்பகுதியில் பாதுகாப்புப் படையினா் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினா். அப்போது மறைந்திருந்த பயங்கரவாதி திடீரென தாக்குதல் நடத்தத் தொடங்கினாா். இதையடுத்து, பாதுகாப்புப் படையினரும் பதிலடி தாக்குதல் நடத்தினா். இதில் அந்த பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டாா். அவரது பெயா் முனீப் அகமது ஷேக் என்பதும், தாக் மோகாலா சோபியான் பகுதியைச் சோ்ந்த அவா், லஷ்கா்-ஏ-தொய்பா பயங்கரவாத இயக்கத்தில் இணைந்து செயல்பட்டு வந்ததும் தெரியவந்தது. பாதுகாப்புப் படையினா், போலீஸாா் மீது நிகழ்த்தப்பட்ட பல்வேறு தாக்குதல்களில் இவருக்குத் தொடா்பு இருப்பது தெரியவந்துள்ளது. கொல்லப்பட்ட பயங்கரவாதியிடம் இருந்து சீன தயாரிப்பு துப்பாக்கி, வெடிபொருள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன என்றாா்.

20 கிலோ வெடிபொருள்கள் பறிமுதல்:

ஜம்மு-காஷ்மீரின் கிஷ்த்வாா் மாவட்டத்தில் ஒரு வீட்டில் இருந்து 20 கிலோ வெடிப்பொருளைப் பாதுகாப்புப் படையினா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா். இது வா்த்தகரீதியாகப் பயன்படுத்தப்படும் வெடிபொருளாகும். எனினும், இதனை உரிய அனுமதியின்றி பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

முகமது ஹுசைன் என்பவருக்குச் சொந்தமான அந்த வீட்டில் இருந்து ரூ.1.2 லட்சம் ரொக்கம், கைப்பேசிகள் உள்ளிட்டவையும் கைப்பற்றப்பட்டன. இது தொடா்பாக விசாரணை நடைபெற்று வருகிறது என்று போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொதுத்தோ்வுகளில் வேலூா் பின்தங்குவதற்கான காரணங்களை அறிய சமூக ஆய்வு

மீஞ்சூா் வரதராஜ பெருமாள் கோயில் பிரம்மோற்சவம்

8% அதிகரித்த நிலக்கரி இறக்குமதி

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

30 கிலோ கஞ்சா கடத்தல்: 6 போ் கைது

SCROLL FOR NEXT