முகப்பு
இந்தியா

மகாராஷ்டிரத்தில் எக்ஸ்பிரஸ் ரயிலின் 11 பெட்டிகள் தடம்புரண்டன

மகாராஷ்டிரத்தில் எக்ஸ்பிரஸ் ரயிலின் 11 பெட்டிகள் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:52 AM
பகிர்:

மகாராஷ்டிரத்தில் எக்ஸ்பிரஸ் ரயிலின் 11 பெட்டிகள் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.

மகாராஷ்டிர மாநிலம், லகாவித்-தேவ்லாலி இடையே எல்டிடி-ஜெய்நகர் பவன் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று மாலை சென்றுகொண்டிருந்தது. இந்த ரயில் நாகிக் நகர் அருகே வந்துகொண்டிருந்தபோது திடீரென ரயிலின் 11 பெட்டிகள் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. 

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு மீட்புக்குழுவினர் விரைந்துள்ளனர். இந்த விபத்தில் பயணிகளுக்கு காயம் எதுவும் ஏற்பட்டதாக தகவல் இல்லை. உடனடியாக பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டு பேருந்தில் அனுப்பிவைக்கப்பட்டனர். 

ரயில் தடம்புரண்டதால் அந்த வழித்தடத்தில் இயக்கப்பட்ட 3 ரயில்கள் மாற்று வழித்தடத்தில் திருப்பிவிடப்பட்டுள்ளன. விபத்து குறித்து ரயில்வே நிர்வாகம் விசாரணை மேற்கொண்டு வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.