இந்தியா

கேரளம்: செல்ஃபி மோகத்தால் ஏரியில் மூழ்கி மணமகன் பலி

கேரளத்தின் கோழிக்கோடு மாவட்டத்தில் புதுமணத் தம்பதிகள் செல்ஃபி எடுக்கும்போது தவறி ஏரியில் மூழ்கியதால் மணமகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். 

DIN

கேரளத்தின் கோழிக்கோடு மாவட்டத்தில் புதுமணத் தம்பதிகள் செல்ஃபி எடுக்கும்போது தவறி ஏரியில் மூழ்கியதால் மணமகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். 

கடந்த மார்ச் 14-ம் தேதி திருமணம் செய்துகொண்ட ரெஜிலாலும் அவரது மனைவியும் திங்களன்று குட்டியாடி அருகே உள்ள சுற்றுலாத் தலத்துக்கு வந்து ஏரி முகப்பில் பொழுதைக் கழித்தனர். 

அப்போது இருவரும் செல்பி எடுத்துக்கொண்டிருந்தபோது தண்ணீர் வரத்து அதிகமாக இருந்த ஏரியில் திடீரென தவறி விழுந்தனர். கிராம மக்கள் அவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.  ஆனால்  மணமகன் ஏரியில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். 

ஏரியிலிருந்து மணமகளை மீட்டு தற்போது சிகிச்சை மேற்கொண்டு வருகிறது.

பெருவணமுழி போலீசார் வழக்குப் பதிவு செய்து, உடலை மீட்டு விசாரணை நடத்தி வருவதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

செல்பி மோகத்தால் இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நிகழ்வது வருந்தத்தக்க விஷயமாகவே உள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அஜீத் பவாரின் மரணம் வருத்தமளிக்கிறது: ராகுல் காந்தி இரங்கல்!

விமான விபத்தில் அஜீத் பவார் பலி! சம்பவ இடத்தின் காட்சிகள்!

நீதிக் கதைகள்! தர்மம் தலை காக்கும்!

அஜீத் பவாரின் நிறைவேறாத முதல்வர் கனவு! மகுடம் சூடாத மக்களின் மன்னர்!

மகாராஷ்டிரத்தில் 3 நாள்கள் துக்கம் அனுசரிப்பு! பாராமதி விரையும் முதல்வர்!

SCROLL FOR NEXT