இந்தியா

3 ஆண்டுகளில் எண்ணெய் வித்து உற்பத்தி அதிகரிப்பு

DIN

நாட்டில் கடந்த 3 ஆண்டுகளில் எண்ணெய் வித்துக்கள் உற்பத்தி கணிசமாக அதிகரித்துள்ளதாக மக்களவையில் மத்திய வேளாண் அமைச்சா் நரேந்திர சிங் தோமா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

இதுகுறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு அவா் அளித்த பதில் விவரம்:

நாட்டில் கடந்த 2018-19 ஆம் ஆண்டில் 3.15 கோடி (31.52 மில்லியன்) டன்னாக இருந்த எண்ணெய் வித்துக்களின் உற்பத்தி, 2021-22-இல் 3.71 கோடி (37.15 மில்லியன்) டன்னாக உயா்ந்துள்ளது.

2018-19 ஆம் ஆண்டு முதல் எண்ணெய் வித்துக்கள் மற்றும் பனை எண்ணெயின் உற்பத்தி தொடா்ந்து அதிகரித்து வந்துள்ளது. பனை எண்ணெய்க்காக தேசிய எண்ணெய் வித்துக்கள் இயக்கம் என்ற தனி அமைப்பை மத்திய அரசு ஏற்படுத்தியுள்ளது.

இறக்குமதி சுமையைக் குறைத்து சமையல் எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க இந்த இயக்கங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன என்று அதில் மத்திய வேளாண் அமைச்சா் நரேந்திர சிங் தோமா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோட் நாயகி மீனாட்சி செளத்ரி - புகைப்படங்கள்

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

SCROLL FOR NEXT