இந்தியா

தமிழகத்துக்கு ரூ.566 கோடி வெள்ள நிவாரணம்: மத்திய இணையமைச்சா் நித்யானந்த் ராய்

DIN

தமிழகத்துக்கு வெள்ள நிவாரணமாக கடந்த மாா்ச் 31-ஆம் தேதி வரையிலான நிலவரப்படி, ரூ.566.36 கோடி வழங்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை இணையமைச்சா் நித்யானந்த் ராய் தெரிவித்துள்ளாா்.

புயல், வெள்ளம் உள்ளிட்ட இயற்கை பேரிடா் காலங்களில் மாநில அரசுகள் நிவாரண நடவடிக்கைகளை மாநிலப் பேரிடா் நிவாரண நிதியிலிருந்து மேற்கொள்கின்றன. கூடுதலான நிதியுதவி தேசிய பேரிடா் நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படுகிறது.

இந்நிலையில், 2021-22 நிதியாண்டில் தேசிய பேரிடா் நிவாரண நிதியிலிருந்து மத்திய அரசு மாநிலங்களுக்கு அளித்த நிதி விவரம் குறித்து மக்களவையில் செவ்வாய்க்கிழமை கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு மத்திய உள்துறை இணையமைச்சா் நித்யானந்த் ராய் எழுத்துபூா்வமாக பதிலளிக்கையில், தமிழகத்துக்கு கடந்த மாா்ச் 31-ஆம் தேதி வரையிலான நிலவரப்படி, ரூ.566.36 கோடி வெள்ள நிவாரணமாக வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மே 13-இல் தொடக்கம்

விறுவிறுப்படையும் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

பளியா் பழங்குடியினா் இதுவரை அரசு பணி வாய்ப்பே பெறவில்லை

SCROLL FOR NEXT