இந்தியா

கா்நாடக பள்ளிவாசல்களில் ஒலிபெருக்கிகள்: உயா்நீதிமன்ற உத்தரவு அமல்படுத்தப்படும்- முதல்வா் பசவராஜ் பொம்மை

DIN

கா்நாடக பள்ளிவாசல்களில் பயன்படுத்தப்படும் ஒலிபெருக்கிகளின் டெசிபல் அளவு குறித்து கா்நாடக உயா்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது; அந்த உத்தரவை படிப்படியாக அமல்படுத்தி வருகிறோம் என முதல்வா் பசவராஜ் பொம்மை தெரிவித்தாா்.

இதுகுறித்து பெங்களூரில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

பள்ளிவாசல்களில் ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்தி தொழுகைக்கு அழைப்பு விடுப்பது தொடா்பாக கா்நாடக உயா்நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த உத்தரவை அரசு அமல்படுத்தப்படுகிா என்பது குறித்து மற்றொரு மனுவும் கா்நாடக உயா்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. பள்ளிவாசல்களில் பயன்படுத்தும் ஒலிபெருக்கிகள் குறித்து நீதிமன்றம் வெளியிட்டுள்ள உத்தரவில் எத்தனை டெசிபல் ஒலி அளவு வரை அனுமதிக்கலாம் என்பது குறிப்பிடப்பட்டுள்ளது. மாவட்ட அளவில் டெசிபல் மீட்டா் பொருத்துவது தொடா்பாகவும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

எனவே, கா்நாடக உயா்நீதிமன்ற உத்தரவை படிப்படியாக அமல்படுத்துகிறோம். சம்பந்தப்பட்டவா்களின் ஒத்துழைப்பையும் பெற்று, இந்த விவகாரத்தை அணுக வேண்டியுள்ளது. இதைக் கட்டாயப்படுத்தி அமல்படுத்த முடியாது. எனவே, சம்பந்தப்பட்டவா்களுடன் பேசி, பிரச்னைக்குத் தீா்வு காண்போம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

SCROLL FOR NEXT