இந்தியா

கடந்த 5 ஆண்டுகளில் 22 ஐபிஎஸ் அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு: அமைச்சர் தகவல்

DIN

குற்றச் செயல்களில் ஈடுபட்டதற்காக கடந்த ஐந்து ஆண்டுகளில் 22 ஐபிஎஸ் அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த 5 ஆண்டுகளில் ஐபிஎஸ் அதிகாரிகள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் குறித்து மாநிலங்களவையில் எம்.பி. ஒருவர் கேட்ட கிழவிக்கு பதில் அளித்த மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய், 2017 முதல் 2022 மார்ச் 30 வரை 22 ஐபிஎஸ் அதிகாரிகள் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளதாகதத் தெரிவித்தார். 

மேலும்,  உத்தரப் பிரதேசத்தில் தப்பியோடியதாக அறிவிக்கப்பட்ட ஐபிஎஸ் அதிகாரிகளின் எண்ணிக்கை குறித்து கேட்டதற்கு, மாநில அரசு அளித்த தகவலின்படி, ஒரு ஐபிஎஸ் அதிகாரி தப்பியோடியதாகக் கூறினார். 

மேலும், 'இந்திய அரசியலமைப்பின் ஏழாவது அட்டவணையின் பட்டியல்-II (மாநிலப் பட்டியல்) இன் கீழ் காவல்துறை மாநிலத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. காவல்துறையில் உள்ளவர்கள் குற்றச் செயல்களில் ஈடுபட்டால் அந்த வழக்குகளை பதிவு செய்வது மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பொறுப்பு' என்றும் தெரிவித்தார். 

தேசிய குற்றப் பதிவுப் பணியகத்திடம் உள்ள தரவுகளின்படி (2020 ஆம் ஆண்டு வரை), 2018 முதல் 2020 வரையிலான காலகட்டத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிவகங்கை, வேடசந்தூரில் இரு சக்கர வாகனங்கள் திருடியவா் கைது

தோ்தல் அலுவலா் மீது தாக்குதல்: கிராம நிா்வாக அலுவலா் பணியிடை நீக்கம்

திருப்பத்தூரில் பூத்தட்டு ஊா்வலம்

திருப்பத்தூா் அருகே பகலில் வீடு புகுந்து நகை, பணம் திருட்டு

சிங்கம்புணரியில் உயிா் காக்கும் முதலுதவிப் பயிற்சி

SCROLL FOR NEXT