இந்தியா

உக்ரைனிலிருந்து திரும்பிய மாணவர்களின் படிப்பை நிறைவு செய்ய ஏற்பாடு: ஜெய்சங்கர்

DIN

போர் காரணமாக உக்ரைனிலிருந்து நாடு திரும்பிய மருத்துவ மாணவர்களின் படிப்பை நிறைவு செய்ய இந்தியா மாற்று ஏற்பாடு செய்து வருவதாக வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதல் ஒரு மாதத்திற்கும் மேலாக  தொடர்ந்து வருகிறது. உக்ரைனின் பல்வேறு பகுதிகளைக் கைப்பற்றி வரும் ரஷியப்படையினர் உக்ரைன் மக்களையும் தாக்குவதாக உக்ரைன் குற்றம்சாட்டி வருகிறது. 

குறிப்பாக, உக்ரைனின் அனைத்துப் பகுதிகளையும் முழுமையாகக் கைப்பற்ற ரஷியா தொடர் முயற்சிகளில் ஈடுபட்டு வருதால் போரால் பலரும் இயல்பு வாழ்வை இழந்து வருகிறார்கள்.

இந்நிலையில், உக்ரைனிலிருந்து நாடு திரும்பிய மருத்துவ மாணவர்களின் படிப்பை நிறைவு செய்ய  ருமேனியா, ஹங்கேரி, போலந்து மற்றும் கஜகஸ்தான் ஆகிய உக்ரைனின் அண்டை நாடுகளில் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் மக்களவையில் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

25,000 பென்டிரைவ் விநியோகம்: பிரஜ்வல் விவகாரத்தில் சித்தராமையா சதிச்செயல் - குமாரசாமி குற்றச்சாட்டு

ரோஹித் சர்மாவின் சாதனையை சமன்செய்த சூர்யகுமார் யாதவ்!

"இந்தியா கூட்டணிக்கு மிகப்பெரிய வரவேற்பு!”: திருமாவளவன் பேட்டி!

"என் வாக்கு, என் உரிமை": குஜராத்தில் வாக்களித்தார் ரவீந்திர ஜடேஜா!

SCROLL FOR NEXT