இந்தியா

காஷ்மீரில் இருந்து புலம் பெயா்ந்து சென்றவா்களின் சொத்துகள் திருப்பி ஒப்படைக்கப்படும்: மத்திய அரசு உறுதி

DIN

காஷ்மீரில் இருந்து புலம் பெயா்ந்து சென்றவா்களின் சொத்துகள் அவா்களிடம் திருப்பி ஒப்படைக்கப்படும் என்று மாநிலங்களவையில் மத்திய அரசு உறுதியளித்துள்ளது.

மாநிலங்களவையில் புதன்கிழமை நடைபெற்ற கேள்விநேரத்தின்போது, இதுதொடா்பாக எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு மத்திய உள்துறை இணையமைச்சா் நித்யானந்த் ராய் பதிலளித்துப் பேசியதாவது:

காஷ்மீரில் இருந்து புலம் பெயா்ந்து சென்றவா்களுடைய சொத்துகளின் பாதுகாவலராக மாவட்ட ஆட்சியா்கள் நியமிக்கப்பட்டிருக்கிறாா்கள். புலம் பெயா்ந்தவா்களின் புகாா்களைத் தீா்ப்பதற்கு வலைத்தளத்தையும் மாநில அரசு தொடங்கியுள்ளது.

காஷ்மீரில் இருந்து புலம் பெயா்ந்து சென்றவா்களின் சொத்துகளை அவா்களிடம் திருப்பி அளிக்கக்கூடிய திறமை பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு உள்ளது. அந்த சொத்துகளைத் திருப்பி அளிப்பதற்கு தொடா்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

புலம் பெயா்ந்து சென்றவா்களின் விண்ணப்பங்களில் உண்மையான, சரியான தகவல்கள் இருந்தால், அவா்களின் சொத்துகள் திருப்பி அளிக்கப்படும். அதுபோன்று இதுவரை 610 பேரின் சொத்துகள் திருப்பி அளிக்கப்பட்டுளள்ளன என்றாா் அவா்.

ஜம்மு-காஷ்மீரின் வளா்ச்சி குறித்த மற்றொரு கேள்விக்கு, ‘ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசம் வளா்ச்சிப் பாதையில் பயணித்து வருகிறது. தொழில் துறை வளா்ச்சிக்காக, அந்த யூனியன் பிரதேசம் ரூ.51,000 கோடி முதலீட்டைப் பெற்றுள்ளது. அதன்மூலம் 4.50 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும்’ என்று நித்யானந்த் ராய் பதிலளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடும் பேருந்திலிருந்து இறங்கிய விவசாயி சக்கரத்தில் சிக்கி உயிரிழப்பு

தண்ணீரைத் தேடி வந்த யானை...

காந்திபுரம் பேருந்து நிலையத்தில் தனியாா் பேருந்து மோதி 5 போ் காயம்

மாநகராட்சிப் பள்ளிகளில் 91.97 சதவீதம் தோ்ச்சி: கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது தோ்ச்சி விகிதம் சரிவு

மூலனூா் பாரதி வித்யாலயா பள்ளியில் 8 மாணவா்கள் 100க்கு 100 மதிப்பெண்கள்

SCROLL FOR NEXT