இந்தியா

பொட்டுக்காக சிறுமியை அடித்த ஆசிரியர்: தந்தையின் புகாரால் பணியிடை நீக்கம்

ஜம்மு - காஷ்மீரிலுள்ள ரஜெளரி பகுதியில் பள்ளி ஆசிரியர் ஒருவர் பொட்டு வைத்து வந்ததற்காக மாணவியை அடித்ததாக கூறப்படுகிறது. 

DIN

ஜம்மு - காஷ்மீரிலுள்ள ரஜெளரி பகுதியில் பள்ளி ஆசிரியர் ஒருவர் பொட்டு வைத்து வந்ததற்காக மாணவியை அடித்ததாக கூறப்படுகிறது. 
இது தொடர்பாக தந்தை அளித்த புகாரின் பெயரில், ஆசிரியரைப் பள்ளி நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்துள்ளது. 

ஜம்மு - காஷ்மீரின் ரஜெளரி பகுதியில் நிசார் அகமது என்பவர் பணியாற்றி வந்துள்ளார். அப்பள்ளியில் பயிலும் மாணவி ஒருவர் நெற்றியில் பொட்டு வைத்து வந்ததற்காக ஆசிரியர் அடித்ததாகக் கூறப்படுகிறது.

மேலும், இது தொடர்பாக மாணவியின் தந்தை தரப்பிலிருந்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.  பொட்டுவைத்து வந்ததற்காக தகாத வார்த்தைகளால் திட்டி அடித்ததாக காவல் துறையினர் புகார் பதிவு செய்துள்ளனர்.

இதுபோன்ற சம்பவங்கள் இனி தொடர்ந்தால், வன்முறையில் முடியும் என்றும் மாணவியின் தந்தை எச்சரித்துள்ளார். இதனைத் தொடர்ந்து ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மானாமதுரையில் இன்று மின் தடை

சிறுநீரக மோசடி: தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்தது உயா்நீதிமன்றம்

பஜாஜ் ஃபைனான்ஸ் கடனளிப்பு 27% உயா்வு

அக்டோபரில் 5 மாத உச்சம் தொட்ட பெட்ரோல் விற்பனை

பந்தன் வங்கியின் வருவாய் ரூ.1,310 கோடியாகச் சரிவு

SCROLL FOR NEXT