இந்தியா

ஆயுர்வேதம், யோகா ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்: இந்திய ஆயுர்வேத நிறுவனம்

DIN

புதுதில்லி: ஆயுர்வேதமும், யோகாவும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் என்று அகில இந்திய ஆயுர்வேத நிறுவனத்தின் தலைவர் தனுஜா நர்சி வியாழக்கிழமை தெரிவித்தார்.

சர்வதேச யோகா தினத்திற்கு இன்னும் 75 நாள்கள் உள்ளன. யோகா தினத்திற்கான கவுண்ட்டவுன் தொடங்கியுள்ளது என்று அவர் கூறினார்.

யோகா என்பது ஆயுர்வேதத்தின் ஆன்மீக முகம் மற்றும் ஆயுர்வேதம் என்பது யோகாவின் உடல் முகம். ஆயுர்வேதம், யோகா ஆகியவை ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் என்று அவர் மேலும் கூறினார்.

யோகாவின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த அவர், யோகாவை ஒவ்வொருவரும் வாழ்க்கையில் முறையாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறினார். ஒவ்வொருவரும் தினமும் காலையில் 35 நிமிடங்கள் யோகா செய்ய வேண்டும் என்று அவர் மேலும் கூறினார்.

ஆயுர்வேதத்தின் முக்கியத்துவத்தைப் பற்றிய பேசிய அவர், "இது ஒரு நபரின் உடல் ஆரோக்கியத்தைப் பராமரிக்கிறது. ஆயுர்வேதம் மருத்துவ விஞ்ஞானமோ அல்லது மூலிகை விஞ்ஞானமோ அல்ல, ஆனால் ஆரோக்கியமான மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கை முறையை வாழ்வதற்கான ஒரு வழியாகும். யோகாவை பின்பற்றுவதன் மூலம் நோய்கள் பலவற்றைத் தவிர்க்கலாம்" என்று கூறினார்

மாறும் பருவங்களுக்கு ஏற்ப நமது உணவுப் பழக்கங்களில் மாற்றங்களைக் கொண்டுவருவது பற்றியும் ஆயுர்வேதம் கூறுகிறது என்று அவர் மேலும் கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தலைப்பு மாற்றம் ஐடி பங்குகளுக்கு வரவேற்பு: சென்செக்ஸ் 677 புள்ளிகள் உயா்வு

உச்சநீதிமன்ற வழக்குரைஞா் சங்கத் தலைவராக கபில் சிபல் தோ்வு

தன்னம்பிக்கையின் வெளிப்பாடு...

ஹாங்காங்கில் களைகட்டிய பாரம்பரிய 'பன் திருவிழா'

உலகைப் பிணைக்கும் தொலைத் தொடா்பு!

SCROLL FOR NEXT