இந்தியா

ஆந்திரம்: போலீஸ் உளவாளி என்று சந்தேகித்து முன்னாள் ராணுவ வீரரைக் கொன்ற மாவோயிஸ்டுகள்

DIN

ஆந்திரத்தில், அல்லூரி சீதாராம ராஜு மாவட்டத்தில் போலீஸ் உளவாளி என்று சந்தேகித்து முன்னாள் ராணுவத்தைச் சேர்ந்த அதிகாரியை மாவோயிஸ்டுகள் கொன்றதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

இதுதொடர்பாக காவல் கண்காணிப்பாளர் சதீஷ் குமார் கூறுகையில், 

உயிரிழந்த முன்னாள் ராணுவ வீரர் கொற்ற லக்ஷ்மன் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் அல்லூரி சீதா ராம ராஜு மாவட்டத்தில் உள்ள பெத்தபயலு மண்டலத்தின் போங்கஜங்கி தொலைதூர கிராமத்தில் நிகழ்ந்துள்ளது. 

லக்ஷமன் மாவோயிஸ்ட் அனுதாபியாக வேலைசெய்து வந்தார். ஆனால் அவர் குழுவிலிருந்து வெளியேறி காவல்துறையினரிடம் சரணடைந்தார். அவர் போலீஸ் உளவாளி என்ற சந்தேகத்தின் பேரில் மாவோயிஸ்டுகள் நேற்று அவரைக் கொன்றனர். 

இதுதொடர்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 பொதுத் தேர்வு: தஞ்சாவூர் மாவட்டத்தில் 93.46% தேர்ச்சி

4வது நாளாக ஒரே விலையில் நீடிக்கும் தங்கம்!

பிளஸ் 2 தேர்வு: திருப்பூர் மாவட்டத்தில் 97.45% தேர்ச்சி

குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம்: முதல்வர் ஸ்டாலின்

நாமக்கல்: பிளஸ் 2 பொதுத் தேர்வில் 96.10% தேர்ச்சி

SCROLL FOR NEXT