கோப்புப்படம் 
இந்தியா

டெல்டாவைவிட ஒமைக்ரானை விரைவில் குணப்படுத்தும் பூஸ்டர் தடுப்பூசி

டெல்டா வைரஸ் நோய்த்தொற்றால் குணமடைபவர்களை விட மூன்று நாள்களுக்கு முன்னதாகவே பூஸ்டர் தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்கள்

DIN

லண்டன்: டெல்டா வைரஸ் நோய்த்தொற்றால் குணமடைபவர்களை விட மூன்று நாள்களுக்கு முன்னதாகவே பூஸ்டர் தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்கள் ஓமைக்ரானில் இருந்து குணமடைவார்கள் என்று தி லான்செட் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வு கூறுகிறது.

லண்டன் கிங்ஸ் கல்லூரியில் குழு நடத்திய ஆய்வில், டெல்டா மாறுபாட்டுடன்  ஒப்பிடும்போது, ஓமைக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அறிகுறிகளின் காலம் கணிசமாகக் குறைவாக இருப்பதாகவும், பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது குறைவாக இருப்பதாகவும் ஆய்வு கூறுகிறது. 

டெல்டா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன் ஒப்பிடும்போது, ஓமைக்ரான் வைரஸ் தொற்றால் பரவும் அறிகுறிகளின் கால அளவைக் குறைப்பதில் மூன்றாவது பூஸ்டர் தடுப்பூசி உதவுகிறது என்று கிங்ஸின் இரட்டை ஆராய்ச்சி மற்றும் மரபணு தொற்றுநோயியல் துறையைச் சேர்ந்த டாக்டர் கிறிஸ்டினா மென்னி கூறினார். .

டெல்டா வைரஸின் பாதிப்பை விட (1.9 சதவீதம் எதிராக 2.6 சதவீதம்) ஓமைக்ரான் வைரஸ் பாதிப்பால் மருத்துவமனையில் சேர்க்கும் விகிதம் குறைவாக இருந்தது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

டெல்டா வைரஸுடன் ஒப்பிடும்போது ஒமைக்ரான் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் வேறுபட்ட மருத்துவ அறிகுறிகளை கொண்டு இருந்தனர்  என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பூங்காற்றுத் திரும்புமா.... மான்யா!

முஸ்லிம் மக்கள்தொகை பெருக்கம் குறித்து அமித் ஷா கருத்து: காங். கடும் கண்டனம்!

எம்ஜிஆர் ரசிகராக ராஜ்கிரண்!

தவெக திண்டுக்கல் தெற்கு மாவட்டச் செயலர் கைது

சிரிக்கும் தும்பைப் பூ... கேப்ரியல்லா!

SCROLL FOR NEXT