ஏடிஎம் அட்டை இல்லாமல் பணமெடுக்கும் புதிய வசதி விரைவில்: ஆர்பிஐ
பணமெடுக்க டெபிட் /கிரெடிட் அட்டைகள் ஏதுமின்றி யுபிஐ வசதியைப் பயன்படுத்தி, அனைத்து வங்கி ஏடிஎம்களிலும் பணமெடுக்கும் வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
பணமெடுக்க டெபிட் /கிரெடிட் அட்டைகள் ஏதுமின்றி யுபிஐ வசதியைப் பயன்படுத்தி, அனைத்து வங்கி ஏடிஎம்களிலும் பணமெடுக்கும் வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
தற்போது ஏடிஎம் அட்டை இல்லாமல் பணமெடுக்கும் வசதி ஒரு சில வங்கி தானியங்கி பணப்பரிவர்த்தனை மையங்களில் மட்டுமே நடைமுறையில் உள்ளது. தற்போது, அனைத்து தானியங்கி பணப்பரிவர்த்தனை மையங்களிலும் யுபிஐ வசதியைப் பயன்படுத்தி, அட்டைகள் இல்லாமல் பணமெடுக்கும் வாய்ப்பை வழங்க பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க.. ஒமைக்ரான்-எக்ஸ்இ எப்படிப்பட்டது தெரியுமா? நுண்ணுயிரியல் நிபுணர் விளக்கம்
Advertisement
Advertisement
இதன் மூலம், ஏடிஎம் அல்லது கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தும் போது நடக்கும் ஸ்கிம்மிங், கார்டு குளோனிங் போன்ற முறைகேடுகள் மூலம் பண மோசடிகள் நடைபெறுவது குறைக்கப்படும் என்று ஆர்பிஐ ஆளுநர் சக்திகாந்த தாஸ் கூறியுள்ளார்.
வங்கி வாடிக்கையாளர்கள், யுபிஐ வசதியைப் பயன்படுத்தி ஏடிஎம்களில் பணமெடுக்கும் புதிய வழிமுறை உருவாக்கப்பட்டு, இதுகுறித்து விரைவில் ஏடிஎம்கள் தொலைத்தொடர்பு மற்றும் வங்கிகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.