இந்தியா

இ- சைக்கிள் வாங்கும் முதல் 10 ஆயிரம் பேருக்கு  ரூ.5,500 மானியம்: தில்லி அரசு அறிவிப்பு

DIN


புதுதில்லி: தில்லியில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளைத் தொடர்ந்து, இ- சைக்கிள் வாங்கும் முதல் 10 ஆயிரம் பேருக்கு ரூ.5,500 மானியம் வழங்கப்படும் என்றும், இதில் முதல் 1000 பேருக்கு ரூ.2000 கூடுதல் மானியம் வழங்கப்படும் என்றும் தில்லி அரசு அறிவித்துள்ளது.
   
இதுகுறித்து தில்லி போக்குவரத்து துறை அமைச்சர் கைலாஷ் கெஹ்லட் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தில்லியில் இ- சைக்கிள் வாங்கும் முதல் 10 ஆயிரம் பேருக்கு தலா ரூ. 5,500 மானியமாக வழங்கப்படும். இதில், "முதல் ஆயிரம் பேருக்கு ரூ.2000 கூடுதலாக வழங்கப்படும்".

இதேபோல், நகரத்தில் உணவு விநியோகம் மற்றும் இ-காமர்ஸ் ஓட்டுநர்களுக்கு கனரக சரக்கு இ- சைக்கிள்கள் மற்றும் மின் வண்டிகள் வாங்குவதற்கு மானியம் வழங்கப்படும். கார்கோ இ- சைக்கிள்களுக்கான மானியம் முதல் 5 ஆயிரம் பேருக்கு தலா ரூ.15 ஆயிரம் வரை வழங்கப்படும். இந்த மானியம் முன்பு இ- கார்ட்களை தனிப்பட்ட முறையில் வாங்குபவர்களுக்கு வழங்கப்பட்டது.

இது தற்போது, இந்த வாகனங்களை வாங்கும் நிறுவனம் அல்லது கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ரூ.30 ஆயிரம் மானியமாக வழங்கப்படுகிறது.

மேலும், ஆகஸ்ட் 2020 இல் தொடங்கப்பட்ட தில்லி அரசின் இ-சைக்கிள் திட்டத்தின் கீழ், இதுவரை மொத்தம் ரூ.59.44 கோடி மானியம் செலுத்தப்பட்டுள்ளதாகவும், நகர சாலைகளில் தற்போது 45,900 இ- வாகனங்கள் இயங்கி வருகிறது. இதில் இருசக்கர வாகனங்கள் 36 சதவிகிதம். அத்தகைய இரு சக்கர வாகனங்கள் குறைவான விலைக்கு கிடைக்கவில்லை என்றாலும், ரூ.25 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை கண்ணியமான விலையில் கிடைக்கிறது. 

இ-சைக்கிள்களை ஊக்குவிப்பதில் நாட்டிலேயே முதல் மாநிலமாக தில்லி உள்ளது. தில்லியில் வசிக்கும், ஆதார் அட்டை வைத்திருக்கும் குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களும் இந்த மானியத்திட்டத்தில் இ-சைக்கிள் பெற முடியும் என்று என்று போக்குவரத்து அமைச்சர் கைலாஷ் கெஹ்லோட் கூறினார். 

மேலும் இ-சைக்கிள்கள் மற்றும் சரக்கு இ-வாகனங்களை வாங்குபவர்கள் அனைவரும் தில்லியில் பதிவுசெய்யப்பட்ட இரு சக்கர வாகனங்களை ஸ்கிராப்பிங் செய்வதற்கும், பதிவுகளை ரத்து செய்வதற்கும் ஒரு வாகனத்திற்கு ரூ. 3,000 வரை ஊக்கத்தொகை பெறுவதற்கு தகுதியுடையவர்கள் என்று கைலாஷ் கெஹ்லோட் கூறினார். 

தில்லியில் மொத்த பதிவு செய்யப்பட்ட மின்னணு வாகனங்களின் சதவிகிதம் 12 சதவிதத்தை தாண்டியுள்ளது என்றார்.

இந்த திட்டம்  2020  இல் அறிமுகப்படுத்தப்பட்டபோது, ​​ 2024 ஆம் ஆண்டிற்குள் இ-சைக்கிள் வாகனப் பதிவில் 25 சதவிகிதமாக இருக்கும் என்பது ஆரம்ப இலக்காக இருந்தது. ''சுமார் இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு, இந்த சதவிதம் 1 சதவிகிதம் அல்லது 2 சதவிகிதம் ஆக இருந்தது. இது தற்போது மார்ச் மாதத்தில் 12.6 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. 

தில்லியில் இதுவரை சுமார் 46 ஆயிரம் இ-சைக்கிள்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும், மார்ச் மாதத்தில் மொத்த வாகன விற்பனையில் 12.6 சதவிகிதம் என்ற அதிகபட்ச விற்பனையை அடைந்துள்ளது.  

ஒரு நல்ல தரமான இ-சைக்கிள் விலை சுமார் ரூ.25,000 - ரூ.30,000 என்றும், கார்கோ இ-சைக்கிள் விலை ரூ.40,000 - ரூ.45,000 என்றும், இ-கார்ட்களின் பல்வேறு மாடல்கள் ரூ.90,000 முதல் ரூ.3 லட்சம் வரை சந்தையில் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடிடியில் ரத்னம் எப்போது?

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்? உச்சநீதிமன்றத்தில் காரசார வாதம்

ஓ மை ரித்திகா!

பதவியை தக்கவைக்க பாஜக எந்த எல்லைக்கும் செல்லும்: கார்கே

11 மணி நிலவரம்: 25.41% வாக்குப்பதிவு!

SCROLL FOR NEXT