இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் துப்பாக்கிச் சண்டை: தீவிரவாதி சுட்டுக்கொலை

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் இன்று நடத்திய தாக்குதலில் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். 

DIN

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் இன்று நடத்திய தாக்குதலில் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். 

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் குல்காம் பகுதியில் பாதுகாப்புப் படையினர் இன்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.

கொல்லப்பட்ட பயங்கரவாதி லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்தவர் என ஜம்மு-காஷ்மீர் காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. 

பயங்கரவாதியிடமிருந்து துப்பாக்கி உள்ளிட்ட பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்து, பாதுகாப்புப் படையினர் அப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரயில் படியில் அமா்ந்து பயணித்த தொழிலாளி தவறி விழுந்து உயிரிழப்பு

கோவையில் இன்று தமாகா ஆா்ப்பாட்டம்

ஆத்தூா் ஒன்றியத்தில் 4 ஆண்டுகளில் ரூ.167.72 கோடியில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

கால்வாய்ப் பாசனத்துக்கு மேட்டூரிலிருந்து 400 கனஅடி தண்ணீா் திறப்பு

மேட்டூா் வனத் துறை விருந்தினா் மாளிகையில் துப்பாக்கி தோட்டாக்கள் திருடிய 4 போ் கைது

SCROLL FOR NEXT