இந்தியா

மோடியுடன் நாளை பைடன் ஆலோசனை

DIN


பிரதமர் நரேந்திர மோடியுடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் காணொலி வாயிலாக நாளை (ஏப்ரல் 11) ஆலோசனை நடத்தவுள்ளார். 

இந்த ஆலோசனையில் இருநாட்டு உறவை வலுப்படுத்துவது குறித்தும், சர்வதேச அளவிலான இருதரப்பு கூட்டு நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்படவுள்ளது.

மேலும், இருதரப்பு ஒத்துழைப்பு, தெற்காசியா மற்றும் இந்தோ பசுபிக் பிராந்தியங்களில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள், சர்வதேச பிரச்னைகளில் இருதரப்பு நிலைப்பாடு குறித்தும் ஆலோசனை நடத்தப்படுகிறது. 

ரஷியாவில் எரிபொருள் வாங்கும் இந்தியாவின் நடவடிக்கைக்கு மேற்கு நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், பிரதமர் மோடி பைடனுடன் விவாதிக்கவுள்ளதால், இந்த ஆலோசனை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜெயக்குமார் மரணம்: தடயங்கள் கிடைக்காமல் திணறும் காவல்துறை

நடுவருடன் வாக்குவாதம்: சஞ்சு சாம்சனுக்கு அபராதம்!

தக் லைஃப் படத்தில் சிம்பு: விடியோ வெளியீடு

அருணாச்சல பிரதேசத்தில் லேசான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.1 ஆகப் பதிவு!

முன்னாள் எம்எல்ஏ வேலாயுதன் காலமானார்

SCROLL FOR NEXT