கோப்புப்படம் 
இந்தியா

குஜராத் ரசாயன ஆலையில் விபத்து; 6 பேர் பலி

குஜராத் பருச்சில் உள்ள ரசாயன ஆலையில் விபத்து ஏற்பட்டதையடுத்து ஆறு பேர் உயிரிழந்தனர்.

DIN

குஜார் பருச்சில் உள்ள ரசாயன ஆலையில் வெடி விபத்தில் சிக்கி ஆறு பேர் உயிரிழந்தனர். இதை, காவல்துறை அலுவலர்கள் உறுதிபடுத்தியுள்ளனர். 

அகமதாபாத்திலிருந்து 235 கிமீ தொலைவில் உள்ள தஹேஜ் தொழில்பேட்டை பகுதியில் உள்ள ரசாயன ஆலையில் காலை 3 மணி அளவில் விபத்து நிகழ்ந்துள்ளது.

இதுகுறித்து விரிவாக பேசிய காவல்துறை கண்காணிப்பாளர் லீனா பாட்டீல், "கரைப்பான் வடிகட்டுதல் செயல்முறையின்போது உலை திடீரென வெடித்தது. அப்போது, அதன் அருகில் ஆறு பேர் வேலை செய்து கொண்டிருந்தனர். 

உலை வெடித்ததால் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது. உலை அருகே வேலை செய்து கொண்டிருந்த 6 பேரும் உயிரிழந்தனர். பின்னர் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தீயும் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது" என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புலிகளுக்கு ஆபத்து: உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் -மத்திய அரசு, சிபிஐ உள்ளிட்டவற்றிற்கு நோட்டீஸ்

கொள்முதல் நிலையங்களில் கண்காணிப்புக் குழுக்களை அமைக்க வலியுறுத்தல்

நெப்பத்தூா் தீவுப் பகுதியில் தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்

சட்டைநாதா் சுவாமி கோயிலில் சிறப்பு கோ பூஜை வழிபாடு

கொள்ளிடம் பகுதியில் ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT