கோப்புப்படம் 
இந்தியா

அமைச்சரானார் நடிகை ரோஜா: ஆந்திர அமைச்சரவை விரிவாக்கம்

ஆந்திரப் பிரதேசத்தின் புதிய அமைச்சர்களுக்கு ஆளுநர்  பிஸ்வபூஷன் ஹரிசந்தன் இன்று பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

DIN

ஆந்திரப் பிரதேசத்தின் புதிய அமைச்சர்களுக்கு ஆளுநர்  பிஸ்வபூஷன் ஹரிசந்தன் இன்று பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

கடந்த 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி, இரண்டரை ஆண்டுகளில் அமைச்சர்கள் மாற்றப்படுவார்கள் என அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், ஆந்திர அமைச்சரவையில் இருந்த 11 பேரைத் தவிர மற்றவர்கள் ராஜிநாமா செய்த நிலையில், புதிதாக 14 பேர் இன்று அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.

புதிய அமைச்சர்களுக்கு ஆளுநர் பிஸ்வபூஷன் ஹரிசந்தன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்த விழாவில், முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஆந்திரத்தின் புதிய அமைச்சராக நடிகை ரோஜாவும் பதவியேற்றுக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இரு மாவட்டங்களில் இன்று கனமழை!

துக்கத்தில் முடிந்த திருமணக் கொண்டாட்டம்! பேருந்து விபத்தில் சகோதரிகள் மூவர் பலி!

கோவை மாணவி பாலியல் துன்புறுத்தல்: குற்றவாளிகளைப் பிடித்தது எப்படி? காவல் ஆணையர் பேட்டி! | CBE

பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்த முன்னாள் போட்டியாளர்கள்!

பாமக எம்எல்ஏ அருள் சென்ற காரை வழிமறித்து தாக்குதல்! அன்புமணி காரணமா?

SCROLL FOR NEXT