இந்தியா

குஜராத் ரசாயன ஆலையில் விபத்து: பிரதமர் மோடி இரங்கல்

DIN

குஜராத்தின் பரூச்சில் உள்ள தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தோருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். 

அகமதாபாத்திலிருந்து 235 கிமீ தொலைவில் உள்ள தஹேஜ் தொழில்பேட்டை பகுதியில் உள்ள ரசாயன ஆலையில் இன்று காலை 3 மணியளவில் விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த வெடி விபத்தில் சிக்கி ஆறு பேர் உயிரிழந்தனர்.

இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், 

பரூச்சில் உள்ள தொழிற்சாலையில் நிகழ்ந்த விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்பு குறித்து பிரதமர் நரேந்திர மோடி மிகுந்த துயரமடைந்தார். உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தமது ஆழ்ந்த இரங்கலையும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தோருக்கு ரூ.50,000 வீதம் நிவாரண உதவி வழங்கப்படும் எனவும் பிரதமர் அறிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெ. சுபாஷ் சந்திர போஸ் காலமானார்

சதுரகிரிக்குச் செல்ல மே.5 முதல் அனுமதி!

காரைக்கால் மாங்கனித் திருவிழா பந்தல்கால் முகூா்த்தம்:திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

மறுவெளியீட்டில் அசத்தும் கில்லி: அஜித்தின் 3 படங்கள் இணைந்தும் குறைவான வசூல்!

இந்தியாவில் 2 கோடி கணக்குகளை நீக்கியது வாட்ஸ்ஆப்

SCROLL FOR NEXT