இந்தியா

சில்லறை பணவீக்கம் 6.95% ஆக அதிகரிப்பு

நாட்டில் கடந்த மார்ச் மாதத்தில் சில்லறை பணவீக்கம் 6.95 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.

DIN

நாட்டில் கடந்த மார்ச் மாதத்தில் சில்லறை பணவீக்கம் 6.95 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதத்தில் 6.07 சதவிகிதமாக இருந்த நிலையில், 17 மாதங்களில் இல்லாத அளவுக்கு சில்லறை பணவீக்கம் தற்போது அதிகரித்துள்ளது.

நாட்டில் சில்லறை பணவீக்கமானது கடந்த ஜனவரி மாதத்தில் 6.01 சதவீதமாக இருந்தது. கடந்த மூன்று மாதங்களாகவே சில்லறை பணவீக்கம் அதிகரித்தே இருந்ததாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. கடந்த மூன்று மாதங்களில் மட்டும் சராசரியாக சில்லறை பணவீக்கம் 6.3 சதவிகிதமாக இருந்துள்ளது.

ஏப்ரல் - ஜீன் வரையிலான மூன்று மாதங்களில், அதாவது இரண்டாவது காலாண்டில், சில்லறை பணவீக்கம் 6.3 சதவிகிதமாகவும்,  ஜூலை - செப்டம்பர் காலாண்டில் 5.8 சதவிகிதமாகவும் இருக்கும் என்று ஆர்பிஐ கணித்துள்ளது.

கடந்த டிசம்பா், ஜனவரி மாதங்களில் பணவீக்கம் சற்று குறையத் தொடங்கிய நிலையில், கடந்த பிப்ரவரி, மார்ச் மாதங்களில் மீண்டும் அதிகரித்துள்ளது.

உக்ரைன் மீது ரஷியா நடத்திய தாக்குதலால் கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, ரசாயனப் பொருள்கள், உலோகங்கள் உள்ளிட்டவற்றின் விலை உயா்ந்ததே பணவீக்கம் அதிகரித்ததற்கான முக்கியக் காரணமாக இருந்ததாக மத்திய வா்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஊதியூரில் இன்றைய மின்தடை ரத்து

அரசுப் பள்ளிக்கு சுற்றுச்சுவா் கட்டித்தர கோரிக்கை

தொண்டா்களின் கருத்தைத் தான் பிரதிபலித்தேன்: கே.ஏ.செங்கோட்டையன்

அந்தியூரில் பட்டா நிபந்தனைகளை நீக்கக் கோரி காத்திருப்புப் போராட்டம்

செப். 19-இல் விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம்

SCROLL FOR NEXT